Categories
அரசியல் மாநில செய்திகள்

சாதகமான தீர்ப்பு வந்துடுச்சு..! ஆளுநர் மாளிகை ஓடிய பாஜக… அமைச்சர் பதவிக்கு ஆப்பு .. ஷாக்கில் C.M ஸ்டாலின்.. பெரும் பரபரப்பில் DMK

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர்கள் நயினார் நாகேந்திரன்  தலைமையில் ஆளுநரை சந்தித்துள்ளார்கள். முக்கியமான காரணம் என்னவென்றால், தமிழகத்தினுடைய ஊழல் அமைச்சராக, ஊழலுக்கு எல்லாம் ஒரு தலைவராக இருக்கக்கூடிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பதவி விலக வேண்டும் என்கின்ற ஒரு கோரிக்கையோடு ஆளுநரிடம் சென்றுள்ளோம்.

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் பண்ணனும், உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று வலியுறுத்துவதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் சென்றிருக்கின்றார்கள். காரணம் சுப்ரீம் கோர்ட்டில் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருக்கக்கூடிய தீர்ப்பு, இது வந்து இந்தியாவிலேயே இந்த மாதிரி தீர்ப்பு எங்கேயும் வந்தது கிடையாது, இந்தியாவிலேயே நடந்தது கிடையாது.

2011 இல் இருந்து 14 வரை தமிழகத்தினுடைய ட்ரான்ஸ்போர்ட் அமைச்சராக இருக்கும்போது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களிலும் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள், அரசு பணி. அதற்கு பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுத்ததாக ட்ரான்ஸ்போர்ட் டிபார்ட்மெண்டில் இருக்கின்ற கவர்மெண்ட் ஆபீஸரே  எஃப்.ஐ.ஆர் போடுகிறார்கள். அதை காவல்துறை விசாரிக்கிறது. இடையில் அவருடைய பிஏ ஒரு ப்ரோக்கர்,  அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், அவருடைய தம்பி அசோக் அவர்கள் 4 பேரை முக்கிய குற்றவாளியாக போட்டு எஃப்.ஐ.ஆர் எல்லாம் முடிவு செய்து, சார்ஜ் சீட் எல்லாம் போட்டுள்ளார்கள்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு போன போது நீதியரசர்கள், அப்துல் நசீர் அவர்கள் தலைமையிலான பெஞ்ச் அற்புதமான, சரித்திரம் வங்கிய தீர்ப்பை கொடுத்துள்ளது. அந்த தீர்ப்பை முழுமையாக படிக்கும் போது எப்படி மாநில அரசுக்கு ஒரு மிகப்பெரிய கொட்டு வைத்திருக்கிறார்கள், அமைச்சிருக்கு கொட்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Categories

Tech |