Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள்…. அகற்ற முயற்சித்த அதிகாரிகள்…. ஓசூரில் பரபரப்பு….!!!!

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அட்கோ பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. இந்த கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அந்த கடைகளை அகற்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் ஊழியர்களுடனும் பொக்லைன் எந்திரத்துடனும் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த சமயத்தில் அங்கு ஏராளமான வியாபாரிகள் திரண்டனர். அவர்களுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்ன கிருஷ்ணன் மற்றும் ஏராளமான அதிமுகவினர் திரண்டனர். இவர்கள் வியாபாரிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

அந்த சமயத்தில் நோட்டீஸ் எதுவும் வழங்காமல் கடைகளை காலி செய்யக் கூறுவது நியாயம் கிடையாது என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அங்கு இருந்த அதிகாரிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனரான பாலசுப்பிரமணியனை வியாபாரிகள் அனைவரும் நேரில் சந்தித்து கடைகளை அகற்ற கால அவகாசம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ஐந்து நாள் அவகாசம் தந்துள்ளார். ஆனால் வியாபாரிகள் தரப்பில் கூடுதலாக ஐந்து நாள் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலிடத்தில் பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |