Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த பண்டல்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக ரயிலில் கடத்தி வந்த கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ரயில்வே தனிப்படை போலீசார் ரயிலில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் கிடந்த ஒரு பையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை எடுத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சேலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |