பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளத்தில் இருந்து மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் சேர்க்கப்படும். இந்த பிஎஃப் பணம் ஒருவர் 10 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால் வட்டியுடன் சேர்த்து ஓய்வூதியமாக வழங்கப்படும். ஆனால் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் சில நேரம் வேறு நிறுவனங்களுக்கு மாறவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அதோடு சிலர் வேலையை இழக்கக்கூட நேரிடும். அதன்பின் மீண்டும் புதிதாக வேலையில் சேர்வதற்கு சில நாட்கள் நீடிப்பதால் உங்களுடைய பிஎஃப் தொகை என்னவாகும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இந்நிலையில் இபிஎஃப்ஓ விதியின்படி ஒருவர் 10 வருடங்கள் பணி புரிந்தால் தான் பி எஃப் பணம் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார். நீங்கள் வேலைக்கு சேரும்போது உங்களுக்கு பி எஃப் பிடித்தம் செய்யப்படுவதால் யுஏஎன் நம்பர் கொடுக்கப்படும்.
இந்த யுஏஎன் நம்பரை எப்போதும் உங்களுடன் பத்திரமாக வைத்திருப்பது மிகவும் அவசியமானதாகும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது பழைய கம்பெனியில் இருந்த பிஎஃப் கணக்கு புதிய கம்பெனிக்கு அப்படியே மாற்றி எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி பழைய நிறுவனத்தில் பணிபுரிந்த வேலை நாட்கள் புதிய நிறுவனத்தில் இணைத்துக் கொள்ளப்படுவதால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிஎஃப் பணம் உங்கள் கைகளுக்கு வந்து விடும். இதனையடுத்து 10 ஆண்டுகள் முடிவடையாவிட்டாலும் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.
ஏனெனில் நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே உங்களுடைய ஓய்வூதிய கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம். ஆனால் அதற்கான வட்டி கிடைக்காது. ஒருவர் 10 ஆண்டுகள் பணியில் இருந்து கடைசி மாதத்தின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டால் தான் பிஎஃப் பணம் முழுமையாக கையில் வந்து சேரும். மேலும் யுஏஎன் நம்பரை எப்போதும் பத்திரமாக வைத்திருப்பது மிக மிக அவசியம். ஏனெனில் உங்களுடைய யுஏஎன் நம்பரை நீங்கள் இழந்து விட்டால் பிஎஃப் கணக்கு மீண்டும் புதிதாக தொடங்கப்படும்.