Categories
தேசிய செய்திகள்

ஒரு சில மணி நேரங்களில் 2 தோழிகள் அடுத்தடுத்து தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

மராட்டியத்தின் புனே நகரில் அடாப்டர் எனும் பகுதியில் ஒரே கட்டிடத்தில் 19 வயது உடைய இரண்டு தோழிகள் வசித்து வருகின்றார்கள். சிறு வயது முதலே அவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக இருந்து வந்திருக்கின்றனர். இந்த சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணி அளவில் தோழிகளில் ஒருவர் படுக்கையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளர் கோகுலே உடலை ஆம்புலன்ஸில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றார். இதனை தொடர்ந்து நான்கு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் முகப்பு பகுதியில் இருந்து இரவு 7.30 மணி அளவில் மற்றொரு தோழி கீழே குதித்து தற்கொலை செய்து இருக்கின்றார்.

இவர்களில் ஒருவர் வர்த்தக படிப்பும் மற்றொரு தோழி அனிமேஷன் பாடமும் படித்து வந்திருக்கின்றார்கள். இந்த நிலையில் அவர்கள் இருந்த அறையில் எந்தவித குறிப்புகளும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. மேலும் இந்த முடிவை எடுத்ததற்கான காரணங்களும் என்ன என்பது தெரியவில்லை. இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு சில மணி நேர இடைவெளிகளில் சிறுவயது முதலில் தோழிகளாக இருந்த இரண்டு தோழிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |