காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை “பாரத் ஜோதா யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை சென்ற 7ஆம் தேதி துவங்கினார். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் கேரளாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டதால் அவருடைய காலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு தேவை என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக இன்று பாதை யாத்திரை நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து பாதயாத்திரை நாளை தொடங்க இருக்கிறது. முன்பு நடைபயணத்தின்போது காலில் கொப்புளங்கள் வந்தாலும், தனது பயணம் தொடரும் என ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.