Categories
உலக செய்திகள்

அரண்மணைக்கு முத்து நகைகளை…. அணிந்து வந்த இளவரசி கேட்…. ராயல் குடும்பங்கள் பின்பற்றும் பாரம்பரியம்….!!

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து பிரித்தானிய மகாராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை பெறச் சென்ற போது வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் முத்து நகைகளை அணிந்து வந்துள்ளார்.

பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரலில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது பூத உடல் செவ்வாய்க்கிழமை                  எடின்பர்க்-கிலிருந்து பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானிய மகாராணியின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டியை பெற பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்ற போது வேல்ஸ் இளவரசர் வில்லியமும், வேல்ஸ் இளவரசி கேட் இருவரும் நேர்த்தியான முத்துக்களை அணிந்து வந்துள்ளனர். மறைந்த மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அரச குடும்ப உறுப்பினர்கள் முத்துக்களை அணிந்து இருந்ததை பார்க்க முடிந்தது. வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் ஒரு ஸ்மார்ட் கருப்பு உடையுடன் நேர்த்தியாகச் செய்யப்பட்ட முத்து நகைகளை அணிந்து வந்துள்ளார்.

இதனைப் போலவே பாரம்பரிய துக்கத்திற்கான கருப்பு நிற உடையை அணிந்து வந்த டச்சஸ், முத்து காதணிகளுடன் பல சரங்கள் முத்துக்கள் கொண்ட நெக்லஸை அணிந்து வந்ததாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. அரச குடும்பத்தினர் வரலாற்று ரீதியாக துக்கத்தின் போது முத்து நகைகளை அணிந்துள்ளனர், இந்த நடைமுறை விக்டோரியா மகாராணிக்கு முந்திய பாரம்பரியமாகும். Budrevich Fine Jewellery Studioவின் நிறுவனர் Arseiny Budrevich தி எக்ஸ்பிரஸிடம் இது குறித்து தெரிவித்துள்ள தகவலில் கூறியதாவது, “அரச குடும்பத்தார் பெரும்பாலும் முத்துக்களை அணிவார்கள், ஏனெனில் அவர்கள் தாராளமயம், மகத்துவம் மற்றும் பெருந்தன்மையின் உயர்குடி நற்பண்புகளை பிரதிநிதித்துவ படுத்துகின்றார்கள், அத்துடன் இது “தூய்மை மற்றும் கற்பு” ஆகியவற்றைக் குறிக்கின்றது” என  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |