Categories
உலக செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர்…. எங்கள் நாட்டில் இல்லை…. பிரபல நாட்டிற்கு பதிலளித்த தலிபான்கள்….!!

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. 

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்யுமாறு ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இல்லை. பாகிஸ்தான் நாட்டில் தான் இருக்கின்றார் என்று தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மற்றும் கன்ஹார் இடங்களில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மவுலானா மசூத் அசார் இருக்கலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தானின் இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு பாதிக்கப்படலாம் என ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |