பொதுவாகவே திருமணம் என்பது அனைவருக்கும் மறக்க முடியாத தருணமாகவே இருக்கும். அண்மை காலங்களில் திருமணநிகழ்வுகளில் ஏதாவது ஒரு ஆச்சரிய சம்பவங்கள் நடைபெற்று அது காணொளியாக வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது அதேபோன்று ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, திருமண மேடையில் மணமக்கள் அமர்ந்திருக்க, ஐயர் தாலி எடுத்து கொடுத்ததுள்ளார்.
அப்போது மணமகன், மணப்பெண் கழுத்தில் தாலி கட்ட செல்லும் நேரத்தில் மணப்பெண்னோ துள்ளிக்குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி இறுதியில் தனக்கு தாலிகட்டிய கணவரை இறுக்கி அணைத்து முத்தம் கொடுத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.