பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து இருக்கும் திரைப்படம் “கிக்” ஆகும். இப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். பார்டியூன் பிலிம்ஸ் படநிறுவனம் சார்பாக நவீன்ராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கிக் படத்தின் புது அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதாவது, இத்திரைப்படத்தில் நடிகை கோவைசரளா பயர் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து இருக்கிறது.
Introducing the most versatile actress in a new role – Kovai Sarala as Fire Pushpa in #Kick 🤞 after the lead role in #Sembi, she's back in a prominent role!#கிக் #SantasKick @iamsanthanam @iamprashantraj @TanyaHope_offl @raginidwivedi24 @ArjunJanyaMusic @iamnaveenraaj pic.twitter.com/qz0Vp9qBdf
— Fortune films (@Fortune_films) September 14, 2022