Categories
உலக செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்…. பிரபல நாட்டில் இருப்பதாக…. தகவல் வெளியாகின ….!!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தான் நாட்டில் இருப்பதாக ஆப்கான் உள்ளூர் செய்தி நிறுவனமானது தகவல் தெரிவித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை கைது செய்யுமாறு சமீபத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு கடிதம் எழுதியுள்ளது. மசூத் அசார் ஆப்கானிஸ்தான் நாட்டில் நங்கர்ஹர் அல்லது கன்ஹார் இடங்களில் இருக்கலாம் என பாகிஸ்தானிலுள்ள செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானிலிருப்பதாக தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தகவல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் கடிதத்திற்கு பதிலளித்த அவர், “ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இல்லை என்று தகவல் தெரிவித்துள்ளார். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பாகிஸ்தானில் இருக்கக்கூடிய அமைப்பு. ஆனால், அவர் ஆப்கானிஸ்தானில் இல்லை, எங்களிடம் இது போல எதுவும் கேட்கப்படவில்லை. மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் உள்ளார் என செய்திகளில் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இது உண்மையல்ல என்பதை நாங்கள் தெரிவிக்கின்றோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை என்றும், அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என அந்நாடு கூறி வருகின்றது. ஆனால் மசூத் அசார் பாகிஸ்தானின் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |