Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்சிலுவை நாதர் ஆலயம்”….. விமர்சையாக நடைபெற்ற திருவிழா…. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு….!!!!

மனப்பாடு திருசிலுவை நாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாறை கடற்கரையில் திருச்சிலுவை நாதர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த திருத்தலம் தென் மாவட்டங்களில் புகழ்பெற்ற கிறிஸ்துவ ஆலயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஆலயத்தின் 443 வது மகிமை பெரும் திருவிழா கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இந்த திருவிழா மறையுறை திருப்பலியுடன் காலை 8 மணிக்கு மணவை மறைவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் அவர்களின் தலைமையில் ஆலயத்தின் முன்பு கொடியேற்றப்பட்டு துவங்கியது.

இந்த திருவிழா செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தினமும் காலை 6:30 மணிக்கு திருப்பலியும் மாலையில் பங்கு தந்தையர்கள் மறையுரையும் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை ஆசீர், மெய்யான திருசலுவை முத்தம் செய்தல், மாலை 5:30 மணிக்கு கொடியிறக்க திருப்பலியும் நடந்துள்ளது.

இந்த விழாவில் தூத்துக்குடி, தென்காசி, குமரி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த திருவிழாவின் ஏற்பாடுகளை பங்கு தந்தையர்கள் லெனின் டிரோஸ், ஆரோக்கிய அமல்ராஜ், அருட் சகோதரர் ரஷ்யன், அருட் சகோதரிகள், புனித யாகப்பர் ஆலய நல கமிட்டியினர் செய்து உள்ளனர்.

Categories

Tech |