ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 60 வார்டுகளிலும் காலை மாலை நேரங்களில் துப்புரவு பணியாளர்கள் மூலம் ராட்சத எந்திரங்களை கொண்டு கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மூலமாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஈரோடு நகர் நல அலுவலர் பிரகாஷ் பேசும்போது ஈரோடு மாநகராட்சி டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் யாருக்கும் இல்லை வழக்கமாக டெங்கு காய்ச்சல் உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியானது குளிர் காலத்தில் தான் நிகழ்கிறது. வடகிழக்கு பருவமழையின் போது ஜுரம் தென்படுகிறது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக சில இடங்களில் பாதாள சாக்கடைகள் மழை நீர் புகுந்து இருக்கிறது.
சிலர் துணி குப்பைகள் போன்றவற்றை பாதாள சாக்கடை பகுதிகளில் கொட்டி விடுகின்றார்கள். இதனால் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. இதனை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தற்போது கொரோனா தொற்றின் தீவிரம் இல்லை ஆனால் கொரோனா அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் குணமடைந்து விடுகின்றார்கள். இருந்தபோதிலும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் முக கவசம் அணிவது கட்டாயம் மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு நாளும் சுமார் 70 டன் காய்கறிகள் பழங்கள் உணவு கலைகள் பெறப்படுகிறது. அதிலிருந்து 15 நாட்கள் கழித்து இயற்கை உரம் ஆறு அல்லது ஏழு டைம் தயாரிக்கப்படுகிறது. மேலும் விவசாயிகளுக்கு இந்த உரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அவர்களை நேரடியாக உணவு தயாரிக்கும் இடங்களுக்கு வாகனத்தை கொண்டு வந்து பெற்று செல்கின்றார்கள். இந்த நிலையில் ஈரோடு மாநகராட்சியில் 80 சதவீத மக்கள் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வழங்குகின்றார்கள். மேலும் தெருநாய்களை கட்டுப்படுத்த அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. விலங்குகள் நலவாரியம் கூறியபடி அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் மேற்பார்வையில் இது நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.