Categories
மாநில செய்திகள்

சுற்றுலாத்தலமாக மாறப்போகும் மதுரை வண்டியூர் கண்மாய்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னைக்கு அடுத்த படியாக 2வது பெரிய நகரமான மதுரையில் மக்கள் ரசிக்க இயற்கை சார்ந்த சுற்றுலாபகுதி இல்லை என்று நீண்ட நாட்களாக புகார் கூறி வருகின்றனர். இந்த குறையை போக்குவதற்கு மதுரை மாநகர பாண்டி கோயில் அருகேயுள்ள வண்டியூர் கண்மாயை பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத்தலமாக மாற்ற மதுரை மாநகராட்சி முடிவுசெய்து இருக்கிறது. சுமார் ரூபாய்.99 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த டூரிஸ்ட் ஸ்பாட் திட்டத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது.

இங்கு வரும் மக்கள் பொழுதுபோக்கும் விதமாக படகு சவாரி, சிற்றுண்டி கடைகள் என பல வசதிகள் அமைய இருக்கிறது. தற்போது இதன் மாதிரி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கண்மாயை ரசிக்கவரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்மாயின் மையப் பகுதியில் தமிழ்நாடு சிலை நிறுவ திட்டமிடப்பட்டு இருக்கிறது. கண்மாய் கரைபகுதியில் இரவை அழகுபடுத்தும் அடிப்படையில் இசை நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் வருங்கால சந்ததியினருக்கு பொழுதுபோக்கை அளிக்கும் என்று மதுரை மக்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |