Categories
உலக செய்திகள்

சீட்டுக்கட்டு போல் சரிந்த அடுக்குமாடி குடியிருப்பு…. 5 பேர் பலி…. ஜோர்டானில் பரபரப்பு….!!!!

நான்கு மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகி உள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் ஆகும். இங்கு நான்கு மாடிகளை கொண்ட குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் நேற்று மாலை திடீரென சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து தரைமட்டமானது. அந்த சமயத்தில் கட்டிடத்திலிருந்த 25 பேரும் ஈடுபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை தொடங்கியுள்ளனர்.

இந்த மீட்பு பணியில் 5 பேர் உயிரற்ற நிலையில் தான் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 10திற்கும் மேற்பட்டோரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும் அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் விடாது போராடி வருகின்றனர்.

Categories

Tech |