Categories
மாநில செய்திகள்

குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் நீக்கம்….. அரசு உத்தரவு செல்லும்…. தடை விதித்த ஐகோர்ட்..!!

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக இருந்த சரஸ்வதி மற்றும் துரைராஜ், முரளி குமார் உள்ளிட்ட உறுப்பினர்களை நீக்கி கடந்த பிப்ரவரியில் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீக்கம் சட்டவிரோதம் என கூறி அரசின் உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது..

இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆணைய தலைவர், உறுப்பினர்கள் விளக்கமளிக்க அவகாசம் தராமல் நியமனத்தை ரத்து செய்தது சட்டவிரோதம், அரசுக்கு நீக்குவதற்கான அதிகாரம் உள்ளது, ஒட்டுமொத்த உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து 2 நீதிபதிகள் அமர்வு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தனர்.

 

 

 

Categories

Tech |