உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து உக்ரைனில் பயின்று வந்த மாணவ, மாணவிகள் குறிப்பாக மருத்துவம் பயின்று வந்தவர்கள் உட்பட 20,000 பேர் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக இந்தியாவிற்கு திரும்பி விட்டனர். இதையடுத்து அவர்கள் தங்கள் கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று வந்தபோது, இந்திய பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர வழிவகை செய்யும் முறை தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தில் இடம் இல்லை, மாணவர்களுக்கு தளர்வு செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும், எனவே உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய பல்கலைக் கழகங்களில் கல்வியை தொடர முடியாது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.