Categories
உலக செய்திகள்

மோடி நிர்வாகத்தில் இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது…. சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் கருத்து…!!!

சிட்னி பல்கலைக்கழகத்தினுடைய பேராசிரியர், மோடி நிர்வாகத்தின் படி இந்திய ஜனநாயகம் நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சிட்னி பல்கலைக்கழக துணை பேராசிரியராக இருக்கும் சால்வடோர் பாபோன்ஸ், சமூக விஞ்ஞானியாகவும் இருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது, இந்திய அரசாங்கம் குறித்து மிகவும் மோசமாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அவை நிஜத்தில் பாஜக மீதான விமர்சனங்கள் தான்.

பா.ஜ.கவின் உள்நாட்டு அரசியல் எதிரிகள் இவ்வாறு விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். சமூகங்கள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் போன்றோர் அதனை விரிவுபடுத்தி ஒளிபரப்புகிறார்கள். தனிப்பட்ட இந்திய மக்கள், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் அவர் நிர்வாகத்தை குறித்தும் எப்படி நினைத்தாலும், இந்திய ஜனநாயகம் நன்கு ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன என்று தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |