நாட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.அந்த வரிசையில் கேஸ் சிலிண்டர் விலை இன்னும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் பொதுமக்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர். தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் விலை பெரும்பாலான பகுதிகளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே விலை சுமையிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக குறைந்த விலையில் சிறிய கேஸ் சிலிண்டரை இன்டேன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் குட்டி சிலிண்டரின் விலை 750 ரூபாய் மட்டுமே. காம்போசிட் கேஸ் சிலிண்டரான இன்டேன் குட்டி சிலிண்டர் சாதாரண சிலிண்டரை விட குறைவான எடை தான்.
அதுமட்டுமல்லாமல் இதில் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதம் உள்ளது என்பதை எளிதில் பார்த்துக் கொள்ள முடியும். பல அடுக்குகள் இருப்பதால் இந்த சிலிண்டர் பாதுகாப்பானதாகவும் இருக்கும். இந்த சிலிண்டர் தற்போது சென்னை, மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட 28 நகரங்களில் இன்டேன் குட்டி சிலிண்டர் கிடைக்கின்றது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு பயன்படலாம்.