Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. இந்த சேவையை பெற இனி அலைய வேண்டாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. சிம்கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தற்போது ஆதார் கட்டாயமாகப்பட்டுள்ளது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் போட்டோ,முகவரி மற்றும் பெயர் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

இதற்கு முன்பெல்லாம் ஆதார் கார்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால் தலைமை தபால் அலுவலகம் அல்லது அரசு அலுவலகங்களுக்கு மக்கள் அலைய வேண்டியிருக்கும்.இருந்தாலும் சமீபத்தில் ஆதார் ஆணையம் லோக்கல் தபால் அலுவலகங்களில் ஆதார் கார்டில் போட்டோ மற்றும் முகவரி உள்ளிட்ட மாற்றங்களை செய்வதற்கான வசதியை அறிமுகம் செய்துள்ளது.ஆதார் அட்டை பயனாளர்கள் கிராமப்புறங்களில் உள்ள தபால் அலுவலகங்களிலும் கூட மாற்றம் செய்து கொள்ளலாம்.

நாடு முழுவதும் சுமார் 13,352 தபால் அலுவலகங்களில் ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.எனவே தபால் அலுவலகங்களுக்கு சென்று ஆதார் கார்டில் புகைப்படம் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை மக்கள் திருத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் பெயர், மொபைல் நம்பர், இமெயில் ஐடி, பிறந்த தேதி,கைரேகை மற்றும் கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்கள் ஆகியவற்றையும் திருத்திக் கொள்ளும் வசதி உள்ளது.

இதில் புதிய ஆதார் கார்டு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் வசூல் செய்யப்படாது.மேலும் பயோமெட்ரிக் தகவல்களை மாற்றுவதற்கு 100 ரூபாயும் பெயர் மற்றும் முகவரி போன்றவற்றை மாற்றுவதற்கு 50 ரூபாயும் சேவை கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |