Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்….. 6 நாட்களில் 1 லட்சம் பேருக்கு வேலை…. அசத்தும் ராஜஸ்தான் மாநில அரசு……!!!!

மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை போல ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி இந்திராகாந்தி நகர்புற வேலை உறுதி திட்டத்தை மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தொடங்கி வைத்தார். அதன்படி நகர்புறங்களில் சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு திட்டங்கள், பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், பூங்கா பராமரிப்பு, சட்டவிரோத ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் பேனர்கள் அகற்றுதல் போன்ற பணிகள் வழங்கப்படுகின்றது.

18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள் என அரசு அறிவித்துள்ளது. இதில் பயிற்சி இல்லாத தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 259 ரூபாயும்,திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கு தினம்தோறும் 253 ரூபாய் கூலியாக வழங்கப்படும். இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஆறு நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |