விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். திருப்பதியில் நடைபெற்ற இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பங்கேற்றனர். பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் நடைபெற்று இரண்டு வாரங்கள் ஆன நிலையில் விமர்சனங்கள் ஓய்ந்தபாடில்லை. இருப்பினும் அதற்கெல்லாம் அசராத இருவரும் திருமணத்திற்கு பிறகும் உருகி உருகி காதலித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ரவீந்திரருடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்த மகாலட்சுமி என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள், என் இதயத்தை பிடித்துக் கொள்ளுங்கள், எப்போதும் என்னை விட்டு விடாதீர்கள் என்று உருகி இருந்தார். தற்போது மேலும் ஒரு ஃபோட்டோவையும், வீடியோவையும் ஷேர் செய்து உருகி உள்ளார் மகாலட்சுமி. திருமணத்திற்கு முன்பு நடந்த நலங்கு ஃபோட்டோவை ஷேர் செய்துள்ள மகாலட்சுமி ரவிந்தரின் ஒரு வீடியோவையும் பகிர்ந்து உள்ளார். ரவீந்திரன் ஜிம்மை மையப்படுத்தி குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நகைச்சுவையாக உள்ள அந்த குறும்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மகாலட்சுமி, ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வீடியோவை பார்த்து நான் அவரின் ஃபேன் ஆனேன், தற்போது அதே வீடியோவை பெருமையுடன் பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.