Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்!!….. காலாண்டு தேர்வு தாள் பள்ளிகளிலே தயாரிக்கலாம்…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!!!

காலாண்டு தேர்வுக்கான தேர்வுத்தாள்களை பள்ளிகளிலே  தயாரிக்கலாம் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும்  காலாண்டு தேர்வு எப்பம் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள் இடையே இருந்து வந்தது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகள் நடைபெறும் காலாண்டு தேர்வுக்கான தேர்வு தாள்களை தாங்களாகவே தயாரித்து தேர்வுகளை நடத்திக் கொள்ள பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் மாநில முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்களை தயாரித்து அனுப்பும் பொழுது வினாத்தாள்கள் கசியும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் பள்ளிக் கல்வித் துறை இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் காலாண்டு தேர்வுக்கான செய்திகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முடிவு செய்து கொள்ளலாம். ஆனால் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |