அரிசி மளிகை பொருட்கள் விலை உயர்வு அனைத்து தரப்பின் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசி விலை 25 கிலோ பைக்கு சராசரியாக ரூபாய் 100 உயர்ந்துள்ளது. தற்போது 25 கிலோ பை ஒன்றின் விலை ஆனது 1330 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. அரிசி விலை உயர்வுக்கு காரணம் ஆந்திராவிலிருந்து நெல் வரத்து மிகவும் குறைந்ததால் தான். அரிசி மட்டுமில்லாமல் மளிகை பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தை விட சராசரியாக 5 மடங்கு வரை விலை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய அங்காடியில் மளிகை பொருட்கள் விலை கிலோவுக்கு:
துவரம் பருப்பு ரூ.118, சிறுபருப்பு ரூ.103, உளுந்தம் பருப்பு ரூ.120, உருட்டு கடலை ரூ.75, கடலை பருப்பு ரூ.72, மிளகாய் தூள் ரூ.400, தனியா தூள் ரூ.325, மஞ்சள் தூள் ரூ.180, சீரகம் ரூ.290, கடுகு ரூ.105, மிளகு ரூ.570, வெந்தயம் ரூ.110. கோதுமை மாவு (10 கிலோ பாக்கெட்) ரூ.420, மைதா (10 கிலோ) ரூ.410, சர்க்கரை (50 கிலோ) ரூ.1910, வெல்லம் ரூ.60, புளி ரூ.65, பூண்டு (ஊட்டி) ரூ.110, பூண்டு (சாதா) ரூ.80, முந்திரி ரூ.630, திராட்சை ரூ.270. பாமாயில் (1 லி) ரூ.95, சன்பிளவர் ரூ.130, தேங்காய் எண்ணெய் ரூ.195, நல்லெண்ணெய் ரூ.250, டால்டா ரூ.120, ஏலக்காய் ரூ.1120, நீட்டு மிளகாய் ரூ.330, தனியா ரூ.190, பச்சை பட்டாணி ரூ.75, கருப்பு சுண்டல் ரூ.62.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் மின் கட்டண உயர்வால் கடை வாடகை உயர்வு மளிகை பொருட்கள் விளையும் உயர்ந்துள்ளதால், ஹோட்டல் வியாபாரிகள் அனைத்து உணவுகளின் விலையையும் உயர்த்தியுள்ளனர். இதனால் இட்லி ,தோசை, வடை மற்றும் மதிய சாப்பாடு போன்ற ஹோட்டல் பண்டங்கள் விளையும் உயரும் என்று கூறப்படுகின்றது.