Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… வனப்பகுதியில் 2 பாறைகளுக்கு இடையே 300 அடி உயரத்தில் மாட்டிக் கொண்ட நபர்…. பிரேசில் ராணுவத்தின் அதிரடி செயல்…!!!!!!!

பிரேசில் நாட்டின் மிஸ்டரி அல்வேரா வன காப்பகத்தில் சுற்றி திரிந்த ஒரு நபர் உயரமான இரு பாறைகளுக்கு இடையே உள்ள குறுகிய சந்தில் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து அழுதுகொண்டு கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். கிட்டத்தட்ட 300 அடி உயரத்திலிருந்து பாறையின் இடையே அவர் நின்றிருந்த தகவல் பிரேசில் அரசுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பிரேசில் விமானப்படையின் மேஜர் பாப்லோ ஏஞ்சலி தலைமையிலான படையினர் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக நிர்வாண நிலையில் நின்று கொண்டிருந்த அந்த நபரை உயிருடன் பத்திரமாக மீட்டு எடுத்துள்ளனர்.

இது பற்றி ராணுவ அதிகாரிகள் பேசும்போது நிர்வாணமாக பாறையின் இடத்தில் நின்று கொண்டிருந்து 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்கிருந்து கீழே விழும்படியான ஆபத்தான நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக உடலில் காயங்களுடன் இருந்த அந்த மனிதனை மீட்டுள்ளோம். மேலும் விசாரணையில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. எதற்காக அவர் 300 அடி உயரத்திற்கு சென்று நிர்வாண நிலையில் இருந்தார் என்பது அவருக்கு தெரியவில்லை என தெரிவிக்கின்றார்கள். ஆனால் அவர் அவரது நண்பர்களுடன் அந்த பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |