முதல் இரவு அறைக்கு சென்ற மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டிபாடி வாரிப்பள்ளி கிராமத்தில் துளசி பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதன பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்பந்தத்துடன் நடைபெற்றது. இதனையடுத்து குடும்பத்தினர் முதல் இரவுக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு வெளியேறி விட்டனர்.
இந்நிலையில் முதல் இரவு அறைக்கு சென்ற துளசி பிரசாத் சிறிது நேரத்திலேயே திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணப்பெண் சத்தம் போட்டு கத்தியுள்ளார். இவரது சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் துளசி பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதிக்க மருத்துவர் துளசி பிரசாத் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மணப்பெண் மற்றும் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.