Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசுனேன்… அறிக்கை வெளியிட்டேன்… ஸ்டாலின் கண்டுக்கவே இல்ல… வேதனைப்பட்ட எடப்பாடி

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்து தான், வழிப்பறி தான், கொலை, கொள்ளை தான் நடக்குது.  அதோட போதை பொருள். எது கிடைக்கிறதோ இல்லையோ,  கஞ்சா தாராளமாக கிடைக்கிறது, எல்லா பகுதிகளிலும் கஞ்சா கிடைக்கிறது. கஞ்சா விற்பனை செய்யாத இடங்களே இல்லை, இந்த சட்டமன்றத்திலும் பேசினேன், அதோட அறிக்கை வாயிலாகவும் வெளியிட்டேன்.

ஆனால் இன்றைக்கு விடியா திமுக அரசாங்கம் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை. அண்மையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகிறார். அண்டை மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகிறது என்று. அதுதான் உங்களுக்கு தெரிகிறது அல்லவா, அதை தடுத்து நிறுத்த வேண்டும்   தானே. உங்களிடம் அரசாங்கத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பேணிகாக்க கூடிய அரசாங்கம் திமுக அரசாங்கம், மத்திய அரசாங்கம் அல்ல.  மத்திய அரசாங்கத்தின் மீது பழியை போட்டு மாநில அரசு அங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு,  மாநில அரசாங்கத்தின் உரிமை. வெளி மாநிலத்திலிருந்து போதை பொருள் வருகிறது என்று சொன்னால்,  எந்தெந்த இடத்தில் கடத்துகிறார்கள் ? உளவுத்துறை கையிருக்கிறது அல்லவா.திமுக ஆட்சியில் உளவுத்துறை செயலிழந்த உளவுத்துறையாக மாறிவிட்டது என தெரிவித்தார்.

Categories

Tech |