மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமலிங்காபுரம் பகுதியில் செல்வராஜ்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் நேற்று முன்தினம் செல்வராஜ் மூளைச்சாவு அடைந்தார். இதனை அடுத்து செல்வராஜின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவது குறித்து உறவினர்களிடம் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதனை ஏற்றுக்கொண்ட உறவினர்கள் வாலிபரின் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க சம்மதித்தனர். இதனால் வாலிபரின் உடலில் இருந்து கல்லீரல், ஒரு சிறுநீரகம், கண் விழிகள் எடுக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரலை அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.