Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! 10 நிமிடம், 14 மொழிகள், ஒரே டேக் : மாஸ் காட்டும் நடிகர்…!!!

இந்தியன் 2  திரைப்படம் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவருகிறது. கமல்ஹாசன் மற்றும் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேனாதிபதியாக கமல்ஹாசன் தொடர்கிறார்.

இந்தப் படத்தில் 10 நிமிடங்கள் ஓடக்கூடிய சிங்கிள் ஷாட் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. அதனை 14 மொழிகளில் கமல்ஹாசன் தானே பேசி நடித்திருப்பது சினிமாத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தசாவதாரம் படத்தில் 10 கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தது போல இந்தப் படத்தின் இக்காட்சி சாதனை படைக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

Categories

Tech |