கௌதம் மேனன் இயக்க உள்ள அடுத்த திரைப்படத்தில் கதாநாயகனாக யார் நடிக்கின்றார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் கௌதம் மேனன். இவர் ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார். இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகின்றார்.
இந்த நிலையில் தான் இயக்க உள்ள படத்தின் ஹீரோ குறித்து கூறியுள்ளார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ராம் பொத்தினேனியுடன் புதிய படம் ஒன்றிற்காக அடுத்த வருடம் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வித்தியாசமான ஆர்வமூட்டும் கதைக்களமாக இருக்கும் எனவும் தயாரிப்பாளர் ஸ்ரவந்தி ரவி கிஷோர் தனக்கும் ராம் பொத்தினேனிக்கும் ஒரு பொது நண்பராக நீண்ட காலம் இருந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.