IRCTC நிறுவனம் குறைந்த விலையில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அக்டோபர் 13ஆம் தேதி தொடங்கும் இந்த பயணம் 7 இரவுகள் மற்றும் எட்டு பகல்களை கொண்டது. இதனுடன் நீச்சல், கடற்கரை விளையாட்டு, பைக்கிங் போன்ற பல எக்டிவிடி இந்த சுற்றுப்பயணத்தில் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.விமான டிக்கெட்,தங்க மூன்று நட்சத்திர விடுதி ஆகியவற்றை ஐ ஆர் சி டி சி தயார் செய்து வருகிறது. இதற்கு கட்டணமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜின் கீழ் நீங்கள் பயணம் செய்ய திட்டமிட்டால், இதற்கு பாட்னாவிலிருந்து மட்டுமே விமானம் கிடைக்கும்.
மேலும் இரண்டு பயணிகள் பயணித்தால் டூர் பேக்கேஜில் ஒருவருக்கு ரூ.1,07,268 ஆக செலுத்த வேண்டும். மூன்று பேர் பயணம் செய்தால் ஒரு நபருக்கு ரூ.1,07,268 கட்டணமாக செலுத்த வேண்டும். + குழந்தைகளுடன் பயணம் செய்தால், தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி படுக்கையுடன் ரூ.96,180, படுக்கை இல்லாமல் ரூ.85,166 செலுத்த வேண்டும்.இந்த பேக்கேஜின் முன்பதிவு ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான irctctourism.com மூலம் செய்யலாம்.