தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (செப்..16) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோயம்புத்தூரில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி., எஸ்டேட், பி.எஸ்.ஜி., மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகர், நவஇந்தியா, கோபால் நகர், பீளமேடு புதுார், எல்லை தோட்டம், வ.உ.சி., காலனி, பி.கே.டி.நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன்குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகர் பகுதிகள் மின்தடை செய்யப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் புளிக்காரத்தெரு, பழைய பேருந்து நிறுத்தம், வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், முதுநால், இடையர் வலசை, சின்னக்கடை தெரு, பெரியார் நகர், கேணிக்கரை, அரண்மனை, சக்கரக்கோட்டை, சூரன் கோட்டை, வடக்கு தெரு நீலகண்ட ஊரணி, சிவன் கோயில் பகுதி, சாலை தெரு, மதுரை சாலை, அச்சுந்தன் வயல், சாத்தான்குளம், கழுகூரணி பட்டணம் காத்தான் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.
காரைக்குடியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படுகிறது. புதுவயல், சாக்கவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, மித்திரவாயல், பீர்க்களைக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.