Categories
அரசியல் மாநில செய்திகள்

”ராகுல் காந்தி”.. என்னப்பா சொல்லுறது…! அப்படி கேளுங்க… தம்பி கேட்ட நல்ல கேள்வி… கலகப்பாக பேசிய செல்லூர் ராஜீ …!!

ராகுல் காந்தி நடைபயணம் போகிறார் எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு, அப்படி கேளுங்க… என சொல்லி பேச ஆரம்பித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, 

ராகுல் காந்தி இப்போது நடை பயணம் போகிறார். தேச ஒற்றுமைக்காக போகிறார், அது எப்படி அமையும் என்று கேட்டால் நாட்டுக்கு ஒரு நல்லது. ராகுல் காந்தி கூட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?  தமிழகத்தில் துவங்கியிருக்கிறார், அதைப் பற்றி கேட்டால், இது ஒரு நல்ல கேள்வி, தம்பி கேட்டு இருக்காரு. உண்மையிலே ராகுல் இளம் தலைவர். அவருக்கு இது ஒரு அரசியலில் முக்கியத்துவமானது. இந்த பயணம் காங்கிரஸ் இயக்கத்திற்கு பெயர் பெற்ற தருகிறதோ, இல்லையோ, ராகுல் காந்தி அவர்களுக்கு நிச்சயமாக நல்ல பெயரை பெற்று தரும் என்பது என்னுடைய எண்ணம்.

நிமிஷத்துக்கு நிமிஷம் உழைக்கிறேன் என சொல்கிறார் முதல்வர். ஒன்றரை வருடத்தில் மக்களுக்கு ஏதும் பயன் இருக்கிறதா ? முன்னேற்றம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு, 

என்னப்பா சொல்லுறது…! முதலமைச்சர் ஜோக் அடிக்கிறார், ஜோக் அடிக்கும் போது சிரிக்க வேண்டியதாக தான் இருக்கிறது. வடிவேலு இல்லாத குறையை அப்பப்ப திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைச்சர்கள் தீர்த்து வைக்கிறார்கள். நம்முடைய முதலமைச்சர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார், நிமிடத்திற்கு நிமிடம் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார், டிவியில் பேசுகிறார், டிவியில் வருகிறார், அதுதான் நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |