Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் குடிச்சது தப்பா….? பட்டியல் இனத்தவரை தாக்கிய கும்பல்….. தொடரும் சாதிய கொடுமைகள்…..!!!!!

ராஜஸ்தான் மாநிலம் திக்கா பகுதியை சேர்ந்த சதுரராம் மேக்வால் என்பவர் தனது பண்ணையில் இருந்து தனது மனைவியுடன் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அவர் குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்கள் அவரை கட்டை மற்றும் கம்பிகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவர் பாத்திரத்தில் இருந்து தண்ணீரை குடித்ததால் அவரை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சதுரராம் மேக்வாலுக்கு தலை, முதுகு மற்றும் விலா எலும்புகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த இளைஞர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சாதிவெறி வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக அவர் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஸ்.சி-எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |