Categories
மாநில செய்திகள்

மின் கட்டணத்தை தொடர்ந்து அடுத்த உயர்வு…. மாஜி அமைச்சர் வெளியிட்ட ஷாக் நியூஸ்….. அதிர்ச்சியில் மக்கள்…..!!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று அண்ணாவின் திருவுருவ படத்திற்கு தீபாராதனை காண்பித்து, படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்க பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து பேசிய அவர், தமிழகத்தில் தொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில் அரசின் மின்கட்டண உயர்வால் நலிவடைந்த தொழில்கள் மூடு நிலையை ஏற்படுள்ளது. திமுகவின் சொத்து வரி, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை தொடர்ந்து அடுத்த கட்டமாக பேருந்து கட்டணம் திமுக அரசு உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால்  திமுகவிற்கு வாக்களித்த மக்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி, தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை திமுக அரசு நிறுத்தி விடும் என்று கூறப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்களான நிலையில் மதுரையில் திமுக அமைச்சர் மகள் திருமணத்தை 1000 ஆடுகள், 1000 கோழி கறி என ரூ.100 கோடி செலவில் பிரமாண்டமாக திருமணம் செய்துள்ளார். இதற்கு முதல்வரை தலைமை ஏற்று திருமணத்தை நடத்தி வைத்திருப்பது கொள்ளையடிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டுவது போல தெரிகிறது என்று தெரிவித்தார்.

Categories

Tech |