Categories
தேசிய செய்திகள்

IRCTC-யில் ரயில் டிக்கெட் முன்பதிவு…. புது அம்சம் அறிமுகம்…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் கோடிக் கணக்கான பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ரயிலில் நீங்கள் முன் பதிவு செய்தால் தற்போது எளியமுறையில் இருக்கையை முன் பதிவுசெய்யும் அம்சமானது கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கென நீங்கள் ஐஆர்சிடிசி செயலிக்குச் போக வேண்டியதில்லை. ஐஆர்சிடிசி செயலியில் உள் நுழையாமல் உங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி வாயிலாக பல சிறப்பு வசதிகள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. ஐஆர்சிடிசி சாட்போட்டிலிருந்தே முன் பதிவு செய்யக்கூடிய அத்தகைய வசதியைப் பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

வாடிக்கையாளர்களுக்காக இந்த சிறப்பு வசதியை ரயில்வே துவங்கியுள்ளது. இந்த அம்சம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியின்கீழ் ஈஸியாக டிக்கெட்டை முன் பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி இணையதளத்தின் அடிப்படையில், இப்போது தினசரி 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இணையத்தில் முன் பதிவு செய்கின்றனர். இதுதவிர்த்து பயணிகள் ஆப் மற்றும் ஸ்டேஷன் வாயிலாக டிக்கெட் முன் பதிவு செய்யும்போது, பல்வேறு நேரங்களில் இணையதளம் சரியாக செயல்படாத காரணத்தால், உரிய நேரத்தில் டிக்கெட் பெற முடியாமல் சிரமப்படுகின்றன.

இதற்கென சாட்போட் வசதியை ரயில்வே தொடங்கியுள்ளது. இவ்வசதியில் நீங்கள் எந்தத் தனிக்கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இணையத்தில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டுமோ, அதே கட்டணத்தையே சாட்போட்டிலும் செலுத்தவேண்டும். டிக்கெட்டை முன் பதிவு செய்யும்போது, ​​ஸ்லீப்பர் வகுப்புக்கு 10 ரூபாயும், ஏசி வகுப்புக்கு 15 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும். UPI வாயிலாக செலுத்தினால், ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூபாய்.20 மற்றும் ஏசி வகுப்பிற்கு ரூ.30 செலுத்தவேண்டும்.

Categories

Tech |