குஜராத் மாநிலத்தின் வதோதராவைச் சேர்ந்த பெண்ணின் முதல் கணவர் கடந்த 2011ம் வருடம் சாலை விபத்தில் இறந்தார். இதையடுத்து அப்பெண் திருமண தகவல் இணையதளம் வாயிலாக வரன்தேடினார். இந்நிலையில் விராஜ் வர்தன் என்பவரை அப்பெண் சந்தித்தார். அதன்பின் கடந்த 2014ம் வருடம் பிப்ரவரிமாதம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட அவர்கள், காஷ்மீருக்கு தேனிலவுக்குச் சென்றனர். இதற்கிடையில் விராஜ் வர்தன் தாம்பத்ய உறவுக்கு சம்மதிக்காமல் பல நாட்கள் சாக்குப்போக்குகளை கூறிக் கொண்டே இருந்தார்.
அப்பெண் அவரை வற்புறுத்தியபோது, சில வருடங்களுக்கு முன் ரஷ்யாவில் இருந்தபோது தான் சந்தித்த ஒருவிபத்து காரணமாக தன்னால் உடலுறவுகொள்ள முடியாது என்று விராஜ் வர்தன் கூறினார். அத்துடன் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியாகிவிடும் என்று அவர் அந்தப் பெண்ணிடம் கூறினார். அதன்பின் ஜனவரி 2020ல், அவர் தன் எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்ய விரும்புவதாகக் கூறினார். அதனை தொடர்ந்து விராஜ் வர்தன் கொல்கத்தா சென்றார். இதனிடையில் விராஜ் வர்தன் உண்மையில் ஒரு பெண் ஆவார்.
இதனால் அவர் ஆண் உறுப்புகளை பொருத்துவதற்காகவும், பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்வதற்காகவும் கொல்கத்தா சென்றுள்ளார். இதனை அந்த பெண் ஒரு கட்டத்தில் தெரிந்துகொண்டார். இதன் காரணமாக அப்பெண் காவல் நிலையத்தில் புகாரளித்தார். தனது கணவர் தன்னுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வதாகவும், இதனைப் பற்றி யாரிடமாவது பேசினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் தன்னை மிரட்டியதாக அவர் புகார் அளித்தார். பின் டெல்லியிலிருந்து குற்றவாளி வதோதராவுக்கு அழைத்து வரப்பட்டதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.கே.குர்ஜார் தெரிவித்தார்.