ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசு நடத்தும் ஆவின் நிறுவனம் மூலமாக பால் மட்டும் இல்லாமல் வெண்ணைய், பன்னீர் உள்ளிட்ட 20 வகையான பால் உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது ஆவின் நேரடி விற்பனை நிலையங்களில் மட்டுமல்லாமல் தனியார் பாலகம், சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, மொத்த விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆவின் பால் பொருள்களின் விலை இதோடு மூன்றாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் இனிப்பு வகை பொருள்களின் விலையை உயர்த்தி இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் ரசகுல்லா, குலாப் ஜாமுன் உள்ளிட்ட 17 வகை இனிப்புகளின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு கிலோ இனிப்பின் விலை 20 முதல் 80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக குலாப் ஜாமுன் 125 கிராம் ஐந்து ரூபாய் உயர்ந்து 50 ரூபாய்க்கும், மைசூர் பாக் அரை கிலோ 230 இல் இருந்து 270 க்கும், பால்கோவா 100 கிராம் 47 ரூபாயிலிருந்து 55 ரூபாய் வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆவின் நிறுவனம் மூலம் வழங்கப்படும் பால், தயிர் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்திய நிலையில் தற்போது மீண்டும் இனிப்பு வகைகளின் விலையை உயர்த்தியுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலை பட்டியல் இதோ:
* 125 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.45 லிருந்து ரூ. 50 ஆக உயர்வு
* 250 கிராம் குலாப் ஜாமுன் விலை ரூ.80 லிருந்து ரூ. 100 ஆக உயர்வு
* 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.40 லிருந்து ரூ.45 ஆக உயர்வு
* 200 கிராம் ரசகுல்லா விலை ரூ.80 லிருந்து ரூ.90 ஆக உயர்வு
* 100 கிராம் பால்கோவா விலை ரூ.47 லிருந்து ரூ.55 ஆக உயர்வு
* 250 கிராம் பால்கோவா விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்வு
* 500 கிராம் மைசூர்பாகு விலை ரூ.230 லிருந்து ரூ.270 ஆக உயர்வு
* 250 கிராம் மைசூர்பாகு விலை ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்வு.
இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.