சீன உளவு கப்பலான யுவான் வாங்5 சமீபத்தில் அம்பன் தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி இதற்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கையில் உள்ள இந்திய சீன தூதரகங்களுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்திய பெருங்கடல் பகுதியில் எந்தவிதமான போரிலும் இலங்கை அங்கம் வகிக்காது என அந்த நாட்டு அதிபர் அணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். தேசிய ராணுவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுக் கொண்டு அவர் பேசும் போது நாங்கள் ராணுவ கூட்டணியில் பங்கேற்கவில்லை. பசுபிக் பெருங்கடலின் பிரச்சினைகள் இந்திய பெருங்கடலுக்கு வருவதை நாங்கள் நிச்சயமாக விரும்பவில்லை.
இது ஒரு மோதலாகவும் போர் நடக்கும் பகுதியாகவும் இருக்க நாங்கள் விரும்பவில்லை. மேலும் எந்த ஒரு வல்லரசு போட்டியிலும் இலங்கை பங்கேற்காது எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் அம்பன் தோட்டத்து துறைமுகம் ஒரு ராணுவ துறைமுகம் அல்ல எனவும் ஒரு வணிக துறைமுகமாக இருந்தாலும் பலர் தேவையற்ற முடிவுகளுக்கு வருவது நமது முக்கியத்துவத்தை காட்டுவதாகவும் கூறிய விக்ரமசிங்கே இந்திய பெருங்கடலையின் புவிசார் அரசியல் துரதிஷ்டவசமாக இலங்கையை அம்பன் தோட்டாவிற்கான குத்தும் பையாக மாறி இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.