மதுரையில் இன்று நடைபெற்ற தோள் கொடுப்போம் தொழில்களுக்கு மண்டல மாநாட்டில் மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிட்டார் முதல்வர்.
மதுரையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து முன்னோடி டைடில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா டைடல் லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்பட்டு நிறுவப்படுவதன் மூலமாக மதுரையின் மையப்பகுதியான மாட்டுத்தாவணி பகுதியில் இரு கட்டமாக இந்த டைடல் பூங்கா பார்க் வரவுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். முதற்கட்டமாக 600 கோடி திட்ட மதிப்பீட்டில் 5ஏக்கரில் டைடல் பார்க் தொடங்கவுள்ளது , இரண்டாம் கட்டத்தில் மேலும் 5ஏக்கரில் இரட்டிப்பாக்கப்படும்
தகவல் தொழில்நுட்பம் பின்டெக் மற்றும் புதிய தொழில்நிறுவனங்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும். முதற்கட்டமாக 10ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.