குளியல் அறைக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் ஏணிகாரன் தோட்டம் பகுதியில் எலக்ட்ரீசியனான ஆகாஷ்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு 12 மணிக்கு மாணவி தனது வீட்டு குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது ஆகாஷ் அங்கு சென்று மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதனை பார்த்த மாணவியின் தாய் கூச்சலிட்டதால் ஆகாஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இது னகுறித்து மாணவியரின் தாய் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.