நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆறுமுகக்கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணியசாமிக்கும், தோப்புத்துறை ைகலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.