Categories
சினிமா

“தமிழ்நாட்டின் தகுதியான பேச்சிலர் சிம்பு தான்”….. பிரபல நடிகை ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த நேற்று வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் அவருக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இட்னானி நடித்துள்ளார். சிம்புவுக்கு அம்மாவாக ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சித்தி இட்னானி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவரிடம் காதல் ரோஜாக்களை பரிசளிக்க வேண்டும் என்றால் யாருக்கு கொடுப்பீர்கள்? என்று கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த அவர், அனைவருக்குமே தெரியும் தமிழகத்தின் தகுதியான பேச்சிலர் சிம்பு தான். எனவே காதல் ரோஜாக்களை அவரிடம் தான் கொடுப்பேன். அதனைத் தொடர்ந்து சிம்பு விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும். அவருக்கான ஜோடி விரைவில் வந்து அவருடன் இணைய இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |