குடும்பத் தகராறு காரணமாக மனைவியை எரிக்க முயற்சி செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
தோவாளை பகுதியை சேர்ந்தவர் புஷ்பதாஸ். இவரது மனைவி இரக்கம். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் நர்சிங் முடித்து விட்டு மதுரையில் பணிபுரிந்து வருகிறார். தனியாக வசித்து வரும் புஷ்பதாஸ் மற்றும் இரக்கம் இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மனைவியின் நடத்தையிலும் புஷ்பதாஸ்க்கு சற்று சந்தேகம் இருந்து வந்துள்ளது.
நேற்றைய முன் தினம் எப்போதும் போல் இருவர் இடையே சண்டை வர இதனால் கோபம் கொண்ட புஷ்பதாஸ் மனைவி இரக்கத்தை கம்பால் தாக்கியுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வந்து இறக்கத்தின் உடல்நிலை தீ வைத்துள்ளார். வீட்டின் பின்வாசல் வெளியே சென்றுள்ளார் இரக்கம். அப்போது வீட்டின் பின்னால் இருந்த ஓலைக்குடிசையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இரக்கத்தின் சத்தத்தைக் கேட்டும் எரிந்த தீயில் பார்த்தும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இரக்கத்தின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு இரக்கத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது தனது கணவன் தன் மீது சந்தேகம் கொண்டு தகராறு செய்வதாகவும் அவர் தான் தன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும் கூறினார் இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் புஷ்பதாஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.