ராணுவ பணிக்கு தேர்வான மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேயான் நகரில் டெய்லரான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அம்சவேணி என்ற மனைவியும், வசுந்தரா(20)என்ற மகளும் இருக்கின்றனர். வசந்தரா கோவை சி.எம்.எஸ் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இந்நிலையில் இந்திய ராணுவத்தில் வேலை பார்ப்பதற்காக வசுந்தரா விண்ணப்பித்துள்ளார். இதற்காக மும்பை இராணுவ தலைமையகத்தில் தேர்வு நடைபெற்றது.
அந்த தேர்வில் முதலிடம் பிடித்த வசுந்தரா இந்திய ராணுவத்தில் லோயர் டிவிஷனல் கிளர்க் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை கொண்டாடும் விதமாக மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில் சிறுமுகை போலிஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா, சிறுமுகை ரோட்டரி சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு மாணவியை பாராட்டியுள்ளனர்.