ஐடி கம்பெனிகளில் வேலைக்கு போக வேண்டும் என்றாலே தமிழக இளைஞர்களுக்கு சென்னையும் பெங்களூரும்தான் முதலில் நினைவிற்கு வரும். இந்த நிலையை மாற்றி தமிழகத்தின் பெருநகரங்களில் ஐடி கம்பெனிகளை நிறுவி புதிய புரட்சியை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னோடியாக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த டைட்டில் பார்க் திட்டத்தை கூறலாம். சென்னை தரமணியில் கடந்த 2000 வருடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளது. இதன் மூலமாக வெளி மாநிலங்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க வேண்டிய நிலை மாறி உள்ளது. அதன் பின் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுத்து வந்து தடம் பதித்துள்ளது. இது தமிழக இளைஞர்களுக்கு வர பிரசாதமாக மாறி உள்ளது அதே நேரம் சென்னையில் அதிகரித்து வரும் நெருக்கடியான சூழல் புதிய நிறுவனங்களை பெரு நகரங்களை நோக்கி தள்ளியுள்ளது.
இந்த சூழலில் தான் கோவையில் இரண்டாவது டைடல் பார்க் கொண்டுவரப்பட்டுள்ளது. வடக்கில் சென்னையிலும் மேற்கில் கோவையிலும் தலா ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இந்த இடத்தில் அறிஞர் அண்ணாவின் புகழ் பெற்ற வாசகத்தை கூறியே ஆக வேண்டும் அதாவது வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பதுதான் அது. தென்னிந்திய மாநிலங்களை புறந்தள்ளிவிட்டு வட இந்தியாவை மட்டும் மத்திய அரசு வாழ வைப்பதாக அண்ணா குற்றம் சாட்டியுள்ளார். அதே விஷயம் தமிழகத்திற்கும் பொருந்த போவதாக பலரும் விமர்சிக்க தொடங்கியுள்ளார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்ணாவின் வழிவந்த முதல்வர் ஸ்டாலின் புதிய அத்தியாயம் படைத்திருக்கிறார். அதாவது தென் தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக மதுரையில் டைடல் பார்க் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இதன் மூலமாக தெற்கு வாழும் வாழ வைப்போம் என ஸ்டாலின் நிரூபித்து காட்டியுள்ளார்.
இனி தென் தமிழகத்தில் இருந்து கோவைக்கோ அல்லது சென்னைக்கோ அல்லது பெங்களூருக்கோ ஐடி நிறுவனங்களை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மதுரை மாட்டுத்தாவணிக்கு சென்றால் போதும் முதற்கட்டமாக பத்தாயிரம் பேருக்கு வேலை என தமிழக அரசு அறிவிப்புள்ளது. இது 20,30,50 ஆயிரங்களாக மாறும் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மதுரையை தேடி வருகிறது. வேலை வாய்ப்புகள் பெறுகின்றது. சென்னையை ஓரம் கட்டும் என கனவு காண தொடங்கிவிட்டனர். ஐடி நிறுவனங்களின் வருகையால் உள்கட்டமைப்பு வசதிகளும் தேடிவரும். மேலும் குடியிருப்பு கல்வி சுகாதாரம் போக்குவரத்து பொழுதுபோக்கு என வசதிகள் வரிசையாக கொண்டுவரப்படும். அதன் பின் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் மதுரை மற்றும் தென் மாவட்ட இளைஞர்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிடும் அதே நேரம் போதிய உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு பார்த்து பார்த்து செய்ய வேண்டிய தேவை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள்.