Categories
மாநில செய்திகள்

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியினுள் நெல்மணிகள்…. ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்….!!!!

கீழடி, அகரம், கொந்தகை ஆகிய தளங்களில் தமிழக தொல்லியல்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் வருகிறது. இவற்றில் கொந்தகை தளம் பண்டையகாலத்தில் இடுகாடாக பயன்படுத்தி இருக்ககூடும் என கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரையிலும் மொத்தம் 142 முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது 8 ஆம் கட்ட அகழாய்வில் 57 முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. முழுமையாக சேதமடையாமல் ஒருசில தாழிகள் மட்டுமே இருக்கிறது. அதிலுள்ள பொருட்களை மட்டும் மரபணு சோதனை மேற்கொள்ள தமிழக தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது.

சென்ற மாதம் முழுமையான தாழி திறக்கப்பட்டு அதில் உள்ள எலும்புகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. நேற்றிரவு 2வது முழுமையான தாழி திறக்கப்பட்டது. தமிழக தொல்லியல்துறை ஆணையாளர் (பொறுப்பு) சிவானந்தம், இணை இயக்குனர் ரமேஷ், தொல்லியல் ஆய்வாளர்கள் அஜய்குமார், காவ்யா உள்ளிட்ட குழுவினர், நான்கரை அடி உயரம் உள்ள தாழியை திறந்து அதில் உள்ள பொருட்களை ஆய்வுக்காக வெளியில் எடுத்தனர். அப்போது தாழியினுள் சிதிலமடைந்த மண்டை ஓடும், கை, கால் எலும்புகளும் கிடைத்துள்ளது.

கொந்தகை தளத்தில் இதுவரையிலும் மொத்தம் 142 முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. 8ஆம் கட்ட அகழாய்வில் மட்டும் 57 தாழிகள் கண்டறியப்பட்ட நிலையில்,அவற்றில் 18 தாழிகள் திறந்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நேற்றிரவு 8 மணிக்கு 123வது தாழி திறக்கப்பட்டது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தாழிகளினுள் மண்டைஒடு, சுடுமண் பானைகள், இரும்பு ஆயுதம் ஆகியவைகள் மட்டும் இருந்தது. இந்நிலையில் முதல் முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல்மணிகள் கண்டறியப்பட்டு உள்ளது ஆய்வாளர்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. இறுகி போன நிலையில் கிடைத்துள்ள இந்த நெல் மணிகள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளன.

அதேபோன்று முதன் முறையாக தாழிகளினுள் சுடுமண் பாத்திரங்கள் பல கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக தொல்லியல் துறையினர் கூறியதாவது “2600 வருடங்களுக்கு முன் தாழிகள் அந்தஸ்தின் அடையாளமாகவே கருதப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடுகின்றனர். தாழிகளினுள் உள்ள பொருட்களை வைத்து இறந்தவர்களின் மதிப்பையும் அறியமுடிகிறது. இப்போது திறக்கப்பட்டு உள்ள தாழியினுள் 6 சுடுமண் பாத்திரங்கள் உள்பட 19 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.

பாத்திரங்கள் அதிகளவு உள்ளதாலும், நெல்மணிகள் இருப்பதாலும் இவர் செல்வந்தராகவோ மதிப்புமிக்கவராகவோ இருந்திருக்ககூடும் என்று அனுமானிக்கப்படுகிறது. அத்துடன் முகத்தின் கீழ் தாடை பற்கள் கிடைத்துள்ளது. பற்கள் அனைத்தும் வலுவானதாக இருந்திருக்கும் என்பதன் அடிப்படையில் பார்க்கும் போது, தாழியினுள் புதைக்கப்பட்டவர்கள் நல்ல திடகாத்திரமான வலுவான உடலமைப்பை கொண்டவராக இருந்திருக்கலாம் எனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 8ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இந்த மாதத்துடன் நிறைவுபெற உள்ளதை அடுத்து, தாழிகள் அனைத்தையும் திறந்து ஆய்வு மேற்கொள்ள தொல்லியல்துறை திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |