Categories
அரசியல்

ஒற்றை தலைமை விவகாரம்… திடமாக இருக்கும் ஓபிஎஸ்… அதிர்ச்சியில் பாஜக மேலிடம்…!!!!!

அதிமுகவில் கடந்த நான்கு வருடங்களுக்குப் பின் ஒற்றை தலைமை விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஓ பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின் அதே நாளில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த நிலையில் இதில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் தீர்ப்பை ரத்து செய்ய உத்தரவிட்டிருக்கின்றனர். மேலும் இது ஓ பன்னீர் செல்வம் தரப்பை அதிர்ச்சடைய செய்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஓ பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து மீண்டும் சேர்க்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தனது தலைமையை ஏற்றாலும் ஓ பன்னீர்செல்வம், வி.கே சசிகலா, டிடிவி தினகரன் போன்றோரை அதிமுகவில் சேர்க்க முடியாது என தனது  நெருங்கிய ஆதரவாளர்க எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் ஓ பன்னீர்செல்வத்தை ஒட்டுமொத்தமாக அதிமுகவிலிருந்து வெளியேற்றும் முயற்சியாகவே அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்று அஸ்திரத்தை உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அழுத்தமாக எடுத்து வைத்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த அதிமுகவையே பாஜக மேலிடம் விரும்பினாலும் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதங்களால் 2024 ஆம் வருடம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி கிடைக்குமா என அந்த கட்சி மேலிட தலைவர்கள் தற்போது யோசிக்க தொடங்கிவிட்டனர் இருப்பினும் எடப்பாடி பழனிசாமி தனது முடிவில் மிகவும் உறுதியாக இருக்கிறார் என்கின்றார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

Categories

Tech |