Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுதும் 40 இடங்களில் அதிரடி ரெய்டு” விசாரணையை துரிதப்படுத்திய சிபிஐ….. கடும் நெருக்கடியில் துணை முதல்வர்….!!!!

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு,  அதற்கு பதில் பழைய மதுபான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக கூறி பாஜக துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த ஆளுநர் சிபிஐ விசாரணை நடத்து வதற்கு உத்தரவிட்டார். இதன் காரணமாக டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியோ வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ துணை முதல்வரை வழக்கில் முதல் நபராக சேர்த்துள்ளனர். இதனால் துணை முதல்வர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பழைய மதுபான கொள்கை தொடர்பாக சென்னை, ஹைதராபாத், பெங்களூர், நெல்லூர், டெல்லி உட்பட நாடு முழுதும் உள்ள‌ 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகளால் இன்று காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மதுபான கொள்கை விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தி 0யுள்ளதால் துணை முதல்வருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு, எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |