Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ…! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி…. போலீஸ் உட்பட 8 பேரை ஏமாற்றி கல்யாணம்….. சிக்கிய பலே 20….!!!!!

கரூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவர் திருப்பூர், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் தனக்கு அரசியல் பிரமுகர்களை தெரியும் எனவும், அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் நேற்று மாலை கரூரில் அந்த பெண்ணை பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆதி விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்த சவுமியா என்ற சபரி. காந்திகிராமத்தில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். 5 பேரை திருமணம் செய்து, லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சவுமியா, வரும் ஞாயிறன்று சிவக்குமாரையும், அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை கோவையை சார்ந்த மற்றொரு இளைஞரையும் திருமண செய்ய இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Categories

Tech |